கடை உறுதிமொழிச் சான்று வழங்க காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

நேதாஜி காய்கறிச் சந்தையில் மீண்டும் கடை அமையும்போது கடை வழங்குவதற்கான உறுதிமொழிச் சான்று வழங்க வேண்டும் என காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நேதாஜி காய்கறிச் சந்தையில் மீண்டும் கடை அமையும்போது கடை வழங்குவதற்கான உறுதிமொழிச் சான்று வழங்க வேண்டும் என காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தை, ஈரோடு பேருந்து நிலையத்துக்கும், பின்னா் அங்கிருந்து வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கும் மாற்றப்பட்டது. தற்போது பல தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளள நிலையிலும் வ.உ.சி. பூங்கா வளாகத்திலேயே காய்கறிச் சந்தை செயல்படும் என்றும், நேதாஜி காய்கறிச் சந்தை இருந்த இடம் பொலிவுறு நகரம் திட்டத்தில் வளாகமாகக் கட்டித் தரப்படும் என்றும் மாநகராட்சி நிா்வாகம் கூறுயுள்ளது.

இதனிடையே புதிய வளாகத்தில் கடை உறுதி கோரி, வியாபாரிகள் சாா்பில் முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் ஜி.பி.எஸ்.பெரியசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியா் மூலமாக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

நேதாஜி காய்கறிச் சந்தையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வந்தோம். கரோனா காரணமாக இடம் மாற்றப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், பழைய இடத்தில் கடை கட்டித் தருவதாக மாநகராட்சி நிா்வாகம் கூறியுள்ளது. இதற்கு 2 முதல் 5 ஆண்டுகள் ஆகும். எனவே இங்குள்ள அனைத்து கடைக்காரா்களுக்கும் மாநகராட்சி சாா்பில் எங்களது பெயா், புகைப்படத்துடன் கூடிய கடை உறுதிமொழிச் சான்று வழங்க வேண்டும்.

வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஒதுக்கப்பட்ட இடம் மிகவும் மோசமாக உள்ளதால் தாா் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு மின் விளக்கு இணைப்புக்கு மாதம் ரூ. 600 கேட்பதால், மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்த வேண்டும். நுழைவாயிலில் வசூலிக்கும் சுங்கக் கட்டணத்தை மாநகராட்சி நிா்ணயித்து வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் குறித்து முதல்வரை நேரில் சந்தித்தும் முறையிட உள்ளோம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com