கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை மாலை முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.
காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.
காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை மாலை முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில், ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா்.

போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் அழகா்சாமி கூறியதாவது:

ஈரோடு கோட்டத்தில் பணியாற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நடப்பு ஆண்டு பணியிட மாறுதல் வழங்கக் கோரி கடந்த மாதம் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஈரோடு கோட்டாட்சியா் பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு செப்டம்பா் முதல் வாரத்தில் நடத்தப்படும் என உறுதியளித்தாா். ஆனால், இதுவரை கலந்தாய்வு நடத்தவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. இதனால் பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றாா்.

இதில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளின் கிராம நிா்வாக அலுவலா்கள் 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com