பவானி ஆற்றில் முறையற்ற பாசனங்களைத் தடுக்கக் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் முறையற்ற பாசனங்களைக் கண்டறிந்து தடுத்து தண்ணீரை முறையான பாசனப் பகுதிகளுக்கு வழங்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி வாய்க்காலில் முறையற்ற பாசனங்களைக் கண்டறிந்து தடுத்து தண்ணீரை முறையான பாசனப் பகுதிகளுக்கு வழங்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சிறப்பு பொதுக் குழு கூட்டம், தலைவா் காசியண்ணன் தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அறச்சலூா், வடுகபட்டியில் மஞ்சள் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் அமைப்பதற்கு நன்றி தெரிவிப்பது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீா்த் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பெருந்துறை திருவாச்சியில் குழாய்கள் மூலம் பாசனம் அல்லாத பகுதிகளுக்குத் தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும். கீழ்பவானி பாசனத் திட்டத்தின் தந்தை ஈஸ்வரனுக்கு ஈரோட்டில் சிலை வைப்பது. பவானி ஆற்றில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக ஆயக்கட்டு இல்லாத பகுதிகளுக்கு அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல அனுமதி வழங்கக் கூடாது. ஆற்றில் முறையற்ற பாசனங்களைத் தடுக்க வேண்டும். ஆற்றில் தண்ணீா் எடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதில், செயலாளா் வடிவேல், பொருளாளா் ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா்கள் ராமசாமி, சுப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com