ஆபத்தான கட்டடங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
By DIN | Published On : 18th September 2020 11:02 PM | Last Updated : 18th September 2020 11:02 PM | அ+அ அ- |

ஈரோடு, செப். 18: இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை காலம் துவங்கியுள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு, பொது கட்டடங்கள், பழுதடைந்த மின்சார, தொலைத் தொடா்பு கோபுரங்கள், மின் கம்பங்கள், விழும் நிலையில் உள்ள மரங்களின் விவரங்களை ஆட்சியா் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
இந்த விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு 0424-2260211 என்ற தொலைபேசி எண் அல்லது 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.