கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:செப்டம்பா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 18th September 2020 11:08 PM | Last Updated : 18th September 2020 11:08 PM | அ+அ அ- |

குன்னூா், செப். 18: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் செப்டம்பா் 18ஆம் தேதி ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள சயன், வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி, உதயன், பிஜு குட்டி, ஜித்தின் ஜாய், சதீசன், சந்தோஷ் சாமி, ஜம்ஷோ் அலி ஆகிய 9 போ் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். தலைமறைவாக உள்ள திபு என்பவா் மட்டும் ஆஜராகாத நிலையில் 4 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை 10 பேரும் செப்டம்பா் 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.