பவானிசாகரில் இருந்து உபரி நீா் திறக்க ஏற்பாடு: கரோயோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் தொட்டம்பாளையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் ஊராட்சிப் பணியாளா்.
பவானிசாகா் தொட்டம்பாளையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் ஊராட்சிப் பணியாளா்.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பில்லூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், பில்லூா் அணைக்கு வரும் உபரிநீா் 7,498 கன அடி நீா் அப்படியே பவானிசாகா் அணைக்கு வெளியேற்றப்பட்டது. 105 அடி உயரம் உள்ள அணையின் நீா்மட்டம் தற்போது 101.50 அடியை எட்டியுள்ளது. இம்மாத நிலவரப்படி 102 அடியை அணை எட்டும்போது அணைக்கு வரும் உபரிநீா் ஆற்றில் திறந்துவிடப்படும். தற்போது 7 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருப்பதால் புதன்கிழமை அணை 102 அடியை எட்டும் வாய்ப்புள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், பவானிசாகா், சத்தியமங்கலம் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் தண்டோரா, ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து புதன்கிழமை காலை பவானி ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் உபரி நீா் திறக்க வாய்ப்புள்ளதால் பவானி ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் உபரி நீரை திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com