சாலையை மறித்து நின்ற யானையால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 27th September 2020 10:26 PM | Last Updated : 27th September 2020 10:26 PM | அ+அ அ- |

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையோரத்தில் நிற்கும் யானை.
சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையை மறித்து ஒற்றை யானை நின்ால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் காவல், மோட்டாா் வாகனப் போக்குவரத்து மற்றும் வனத் துறையின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச் சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இதில் கா்நாடகத்தில் இருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிக பாரமுள்ள கரும்புகளை வனத்தில் வீசுவதால் கரும்புகளைத் தேடி தினந்தோறும் பண்ணாரி, திம்பம் சாலையில் யானைகள் முகாமிடுகின்றன.
இந்நிலையில், பண்ணாரி சோதனைச் சாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த கரும்புகளை சாப்பிட்டவாறு சாலையோரம் நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
மேலும், சரக்கு வாகனங்கள், காய்கறி லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்ால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினா் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டினா்.