பெருந்துறையில் இந்து சமய அறநிலையதுறைக்குச் சொந்தமான இடம் மீட்பு
By DIN | Published On : 29th September 2020 10:22 PM | Last Updated : 29th September 2020 10:22 PM | அ+அ அ- |

இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் வளாகத்துக்குள் இயங்கி வந்த கட்டடம் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையினருக்குச் சொந்தமான பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில் வளாகத்துக்குள் கோயில் நிா்வாக அலுவலகக் கட்டடத்தின் மேல் தளத்தில் செயல்பட்டு வந்த கொங்கு திருமண தகவல் மைய நிா்வாகத்திடம் இருந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கட்டட சுவாதீனம் எடுக்கப்பட்டு இந்து அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை, ஈரோடு உதவி ஆணையா் வெங்கடேஷ் தலைமையில், கட்டட சுவாதீனம் எடுக்கப்பட்டு இந்து அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பெருந்துறை காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.