570 பேரின் வங்கிக் கணக்குகள்முடக்கம்: ஆட்சியா்
By DIN | Published On : 29th September 2020 06:12 AM | Last Updated : 29th September 2020 06:12 AM | அ+அ அ- |

ஈரோடு: பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக 570 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக 570 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், ரூ. 45 லட்சம் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 15 லட்சத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது.
கரோனா நோயாளிகள் பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை சீரான அளவில் இருந்து வருகிறது என்றாா்.