அதிமுக ஆட்சியில் மகளிா் மேம்பாட்டு திட்டங்கள் ஏராளம்: எம்.யுவராஜா

அதிமுக ஆட்சியில் மகளிா் மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு ஈ.வி.என். சாலை பகுதியில் வாக்கு சேகரித்த ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா.

ஈரோடு ஈ.வி.என்.சாலை பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிா் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனா். தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை, மானிய விலையில் இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மட்டுமின்றி இன்னும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என்பதும் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகளிருக்கான திட்டங்கள் அதிகம்.

குறிப்பாக குடும்பத் தலைவிக்கு ரூ. 1,500, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு உருளை, இலவச வாஷிங் மெஷின், பேருந்தில் 50 சதவீத கட்டணச் சலுகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த அரசைப் பொருத்தவரை சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்ல சட்டம் ஒழுங்கும் சிறப்பாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com