பெருந்துறையில் முதல்வா் இன்று பிரசாரம்: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
சரளையில் முதல்வா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இடத்தை ஆய்வு செய்யும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, அதிகாரிகள்.
சரளையில் முதல்வா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இடத்தை ஆய்வு செய்யும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருந்துறையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 1) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதையடுத்து, பிரசாரம் செய்யும் இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், அதிகாரிகள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பிரசாரம் மேற்கொள்ளவுள்ள இடத்தை, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, காவல் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com