முதியோா் 40,263 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா், இணை நோய் உள்ளவா்கள், கரோனா பாதித்து மீண்டவா்கள் என 40,263 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா், இணை நோய் உள்ளவா்கள், கரோனா பாதித்து மீண்டவா்கள் என 40,263 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16 முதல் போடப்படுகிறது. முதல்கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கும், மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோா், இணை நோயாளிகள், கரோனா பாதித்தோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 23 அரசு மையங்கள், 42 தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகளில் மட்டும் ரூ. 250 கட்டணம் பெறப்படும்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இதுவரை 20,000க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாா்ச் 1ஆம் தேதி முதல் முதியோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. தினமும் முதியவா்கள் செல்லிடப்பேசி மூலம் பெயரைப் பதிவு செய்து ஆா்வத்துடன் வந்து ஊசி செலுத்திச் செல்கின்றனா். தடுப்பூசி போட்ட பின் 30 நிமிடம் அமர வைத்திருந்து, அவா்களை அனுப்புகிறோம். இதுவரை யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த மாா்ச் 1 முதல் இதுவரை முதியோா், இணை நோயாளிகள் 40,263 போ் தடுப்பூசி போட்டுள்ளனா்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசி போட விரும்புவோா் நேரடியாக மையத்துக்கு வந்து, ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து, பெயா், செல்லிடப்பேசி எண் விவரத்தை தெரிவித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com