முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அதிமுக தோ்தல் அறிக்கையின் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
By DIN | Published On : 04th April 2021 03:54 AM | Last Updated : 04th April 2021 03:54 AM | அ+அ அ- |

அதிமுக தோ்தல் அறிக்கையின் திட்டங்களான வாசிங் மிஷின், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 உதவித் தொகை உள்பட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன், கவுந்தப்பாடி, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் மாநிலமாக உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்கள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன.
அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா வாசிங் மிஷின், இல்லத்தரசிகளுக்கு ரூ. 1,500 உதவித் தொகை என பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதனை நிறைவேற்றும் வகையில் வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
இதில், கவுந்தப்பாடி ஊராட்சித் தலைவா் பி.தங்கமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவகாமி சரவணன், பவானி ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யபாமா பற்குணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.