முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அந்தியூா் கிராமங்களில் திமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 03:55 AM | Last Updated : 04th April 2021 03:55 AM | அ+அ அ- |

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடாசலம் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
அந்தியூா் ஒன்றியம், கெட்டிசமுத்திரம், வேம்பத்தி ஊராட்சிப் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்ற திமுக வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடாசலம் கூட்டணிக் கட்சியினருடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். திமுக தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுப் பேசிய இவா், திமுகவுக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளா்களைக் கேட்டுக் கொண்டாா்.
முன்னாள் ஊராட்சிச் செயலாளா்கள் நாகராஜ், மாணிக்கம், அந்தியூா் ஒன்றியக் குழு உறுப்பினா் வையாபுரி, சிபிஎம் வட்டாரச் செயலாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு தெரிவித்தனா்.