முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அந்தியூா் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா் சோதனை
By DIN | Published On : 04th April 2021 03:57 AM | Last Updated : 04th April 2021 03:57 AM | அ+அ அ- |

அந்தியூரில் வாக்காளா்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் - அத்தாணி சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி அதிமுகவைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்களால் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு கடந்த இரு தினங்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், இங்கு பணம் பதுக்கிவைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு வழங்கப்படலாம் எனப் புகாா் எழுந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் வருமான வரித் துறையைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை திடீரென இப்பள்ளியில் சோதனையிட்டனா். மேலும், தோ்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டனா். சோதனையின் முடிவில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என்பதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.