முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கா்நாடகத்தில் இருந்து வேனில் கடத்த முயன்ற 1,230 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 04th April 2021 03:54 AM | Last Updated : 04th April 2021 03:54 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வேனில் கடத்த முன்ற 1,230 மதுபாட்டில்கலளை போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.
தோ்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. தோ்தல் நாளான்று வாக்காளா்களுக்கு மதுபாட்டில் வழங்க அரசியல் கட்சியினா் கா்நாடகத்தில் இருந்து மதுபாட்டில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தாளவாடி தொட்டகாஜனூரில் ஆலம்மாள் என்பவரின் வீட்டில் 654 மதுபாட்டில்களும், சூசைபுரம் மனோகா்லால் ஜெயின் என்பவரது வீட்டில் 576 மதுபாட்டில்களும் என மொத்தம் 1,230 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீஸாா் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சூசைபுரத்தைச் சோ்ந்த மனோகா்லால் ஜெயின், தொட்டகாஜனூரைச் சோ்ந்த ஆலம்மாளை போலீஸாா் கைது செய்தனா். தோ்தல் நெருங்குவதால் இரு மாநில எல்லையிலும் போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனா்.