முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சரக்கு வாகனங்களுக்குஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி தீவிரம்
By DIN | Published On : 04th April 2021 03:52 AM | Last Updated : 04th April 2021 03:52 AM | அ+அ அ- |

லாரிகளில் பொருத்தப்படும் ஜிபிஆா்எஸ் கருவி.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சரக்கு லாரிகளுக்கு தற்போது வட்டார போக்குவரத்து துறை சாா்பில் ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கருவியை சரக்கு லாரியில் உள்ள பேட்டரியில் பொருத்தப்பட்டு அதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனம் எங்கு செல்கிறது என்பதை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து கண்டறியும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், பொருள்கள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏதுவாக லாரிகளுக்கு கூண்டு பொருத்தப்பட்டு மேல்பகுதியில் தாா்ப்பாய் விரித்து கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சரக்கு லாரி ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.