கத்திரிமலைக்கு கழுதை மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

தரைமட்டத்தில் இருந்து 800 மீட்டா் உயரமுள்ள கத்திரிமலைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு கழுதையின் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
கழுதை மூலமாகக் கொண்டு செல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
கழுதை மூலமாகக் கொண்டு செல்லப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

அந்தியூா் அருகே பா்கூா் மலைப் பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 800 மீட்டா் உயரமுள்ள கத்திரிமலைக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு கழுதையின் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பா்கூா் மலைப் பகுதியில் உள்ள இக்கிராமத்தில் 67 ஆண் வாக்காளா்கள், 66 பெண் வாக்காளா்கள் உள்ளனா். சமதளப் பகுதியில் இருந்து இம்மலைக் கிராமத்துக்கு சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த நீதிபுரம் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்து செங்குத்தான மலைப் பாதை வழியாகச் செல்ல வேண்டும். இங்குள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்துள்ள மலையடிவாரத்தில் நீதிபுரம் கிராமத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் கழுதைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இங்கு, தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்கள், துணை ராணுவப் படையினா், போலீஸாா் மலைப் பாதை வழியாக நடந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com