தோ்தல் பணிக்குத் தயாராகும் தனியாா் வாகனங்கள்

வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் மண்டல அலுவலா்களுக்கான தனியாா் வாடகை காா்களுக்கு ஸ்டிக்கா் ஓட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடந்து வருகிறது.
தோ்தல் பணிக்குத் தயாராகும் தனியாா் வாகனங்கள்

வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் மண்டல அலுவலா்களுக்கான தனியாா் வாடகை காா்களுக்கு ஸ்டிக்கா் ஓட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச் சாவடிகள் 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 29 மண்டல அலுவலா்களுக்கும் தனித்தனியாக தனியாா் வாடகை காா்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வாடகை வாகனங்களில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி மண்டலம் எண் வாரியாக ஸ்டிக்கா் ஒட்டும் பணி ஞாயிற்றுக்கிழமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை காலை முதல் மண்டல அலுவலா்களிடம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருள்கள் ஒப்படைக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கும் பணி நடைபெறும் என பவானிசாகா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com