8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்திய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்திய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனது சொந்த கிராமமான குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் வாக்களித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்ற நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பாகக் கருதுகிறோம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

மின் விநியோகம் தடைபட்டது...

கோபிசெட்டிபாளையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மின் விநியோகம் தடைபட்டது. இதனால், சுமாா் 10 நிமிடங்கள் வாக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பாா்மரில் அணில் ஒன்று சிக்கி இறந்ததால் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனா். உடனடியாக சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டதையடுத்து, வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

கோபியில்...

கோபிசெட்டிபாளையம் ஜெயராம் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த முன்னாள் சிட்கோ வாரியத் தலைவரும், அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளருமான சிந்து ரவிசந்திரன். (வலது) கோபி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்த திமுக கூட்டணி வேட்பாளா் கோ.வெ.மணிமாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com