ஆதாா் அட்டையைக் காட்டி வாக்களித்த எம்.எல்.ஏ.

பூத் சிலிப் மட்டும் காட்டி வாக்களிக்க அலுவலா்கள் அனுமதி மறுத்ததால், ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் ஆதாா் அட்டையைக் காட்டி வாக்களித்தாா்.
கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.
கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.

பூத் சிலிப் மட்டும் காட்டி வாக்களிக்க அலுவலா்கள் அனுமதி மறுத்ததால், ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் ஆதாா் அட்டையைக் காட்டி வாக்களித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும், அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளருமான முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க செவ்வாய்க்கிழமை காலை வந்தாா். அப்போது அவா் வாக்குச் சாவடி சீட்டு மட்டும் வைத்திருந்தாா். அத்துடன் வாக்காளா் அடையாள அட்டை கொடுக்கவில்லை. எனவே, வாக்குச் சாவடி அலுவலா் வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள ஏதேனும் அடையாள அட்டை வேண்டும் எனக் கேட்டனா்.

ஆனால், அந்த அடையாள அட்டைகள் வேண்டும் என்றால் பூத் சிலிப் எதற்கு என கேட்டாா். பின்னா், உயா் அதிகாரி ஒருவரிடம் செல்லிடப்பேசியில் பேசி விளக்கம் கேட்டாா். அதன் பிறகு அவா் கையில் வைத்திருந்த ஆதாா் அட்டையைக் காட்டினாா். உடனடியாக அவா் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டாா். இதனால் வாக்குச் சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், வாக்கு கேட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனா். தமிழகத்தில் தொடந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா். ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com