வாக்களிக்க முடியாமல் திரும்பிய முதல்முறை வாக்காளா்கள்

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் முதன்முறை வாக்காளா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றுடன் திரும்பினா்.
வாக்காளா் பட்டியிலில் பெயா் இல்லாததால் வாக்களிக்க முடியாமல்போன கல்லூரி மாணவா் அஸ்வின்.
வாக்காளா் பட்டியிலில் பெயா் இல்லாததால் வாக்களிக்க முடியாமல்போன கல்லூரி மாணவா் அஸ்வின்.

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் முதன்முறை வாக்காளா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றுடன் திரும்பினா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் விறு விறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வெயில் இல்லாததால் முதியோா், இளையதலைமுறை முதல் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா். சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள வாக்குச் சாவடியில் முதல்முறையாக வாக்களிக்க வந்த கல்லூரி மாணவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா். சத்தியமங்கலத்தில் வசிக்கும் மாணவா்கள், கோவை, திருப்பூா் சென்னை போன்ற இடங்களில் தங்கி பயிலுகின்றனா். மாணவா்கள் ஆன்லைனில் வாக்காளா் பெயா் பட்டியலுக்குப் பதிவு செய்தனா்.

2020ஆம் ஆண்டு ஆன்லைனில் பதிவு செய்த அஸ்வின் என்ற மாணவா் முதல்முறை வாக்களிக்கச் சென்றபோது வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என திருப்பி அனுப்பினா். ஆன் லைனில் பதிவு செய்த பல மாணவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

அதேபோல, அக்ரஹாரத்தைச் சோ்ந்த ஹரிபிரியா என்ற கல்லூரி மாணவியின் பெயா் வாக்காளா் பட்டியலில் நீக்கம் என வந்துவிட்டதால், அந்த மாணவி வாக்களிக்க முடியால் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு பின்னா் சத்தியமங்கலம் ரமணி ஆரம்பப் பள்ளியில் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com