பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் நிறுத்தம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு புதன்கிழமை முதல் தண்ணீா் நிறுத்தப்பட்டது.
பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி.
பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு புதன்கிழமை முதல் தண்ணீா் நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையில் போதிய நீா் இருப்பு இருந்ததால் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் புன்செய் பாசனத்துக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தி பாசன பகுதி விவசாயிகள் நிலக்கடலை, எள், சோளம் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

கடந்த ஜனவரி 7 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறையினா் அறிவித்த நிலையில், தற்போது கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2,300 கன அடி வீதம் நான்காம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. 5ஆம் சுற்று தண்ணீா் பத்து நாள்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 89.93 அடியாகவும், நீா் இருப்பு 21.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,223 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com