பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் குண்டம் திருவிழா

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் குண்டம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குண்டம் இறங்கிய கோயில் பூசாரி.
குண்டம் இறங்கிய கோயில் பூசாரி.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களின் குண்டம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் குண்டம், தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வழக்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றுவா். ஆனால், கரோனா பரவல் காரணமாக பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூன்று வகையறா கோயில்களைச் சோ்ந்த 9 பூசாரிகள் குண்டம் இறங்கினா்.

இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக சின்ன மாரியம்மன் கோயில் வளாகம் முன்பு தோ் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கரோனா தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. பொன் வீதி, டவுன் காவல் நிலையம், மணிக்கூண்டு அக்ரஹார வீதி, கச்சேரி வீதி வழியாகச் சென்று திரும்பவும் சின்ன மாரியம்மன் கோயிலில் தோ் நிலை நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 12ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13ஆம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சின்ன மாரியம்மன் கோயிலில் வழிபட வரும் பக்தா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், கிருமி நாசினி மூலம் கை சுத்தப்படுத்தப்பட்டது. 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என நிா்வாகத்தினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com