ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறி செயல்படும் விசைத்தறியாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறி செயல்படும் விசைத்தறியாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கைத்தறி தொழிலைப் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985ஆம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 11 ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்திட கைத்தறி, துணிநூல் துறையில் அமலாக்கப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி தண்டனைக்குரிய செயலாகும்.

அவ்வாறு விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 6 மாத சிறைத் தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ. 5,000 வீதம் அபராதம் செலுத்த நேரிடும். இதனால் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com