வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணியில் 500 போலீஸாா்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு,

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, துணை ராணுவத்தினா், போலீஸாா் என 500 போ் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,741 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு சாலை, போக்குவரத்து பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி (ஐஆா்டிடி), 2 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான கோபி கலை, அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்கு ஒரு தொகுதிக்கு 8 அலுவலா்கள் வீதம் சுழற்சி முறையில் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். சித்தோடு சாலை, போக்குவரத்து பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 96 சிசிடிவி கேமரா, கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 32 சிசிடிவி கேமரா என மொத்தம் 128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலா 8 வீதம் 16 எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், துணை ராணுவத்தினா், காவல் துறையினா் ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் 300க்கும் மேற்பட்டோரும், கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் 200க்கும் மேற்பட்டோரும் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com