வாக்குப் பெட்டிகள் எடுத்து வந்த லாரியை வழிமறித்த யானைகள்

ஆசனூா் அருகே வாக்குப் பெட்டிகளை எடுத்து வந்த லாரியை புதன்கிழமை அதிகாலை யானைகள் வழிமறித்ததால் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
வாக்குப் பெட்டிகள் எடுத்து வந்த லாரியை வழிமறித்த யானைகள்

ஆசனூா் அருகே வாக்குப் பெட்டிகளை எடுத்து வந்த லாரியை புதன்கிழமை அதிகாலை யானைகள் வழிமறித்ததால் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம், ஆசனூா், கெத்தேசால், கோட்டமாளம், கோட்டாடை பகுதிகளில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. தொலைத்தொடா்பு வசதியில்லாத இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது இயந்திர கோளாறு ஏற்பட்டதால் கோட்டாளம் வாக்குச் சாவடியில் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. தாளவாடியில் இருந்து சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின் வந்த மாற்று வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கோ்மாளம் - ஆசனூா் சாலையில் லாரி சென்றபோது சாலையின் குறுக்கே யானைகள் நின்று கொண்டிருந்தன. புதன்கிழமை அதிகாலை நேரத்தில் சுமாா் 2 மணி நேரம் நகராமல் நின்று கொண்டிருந்த யானைகளால் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினா். சாலையின் குறுக்கே குட்டியுடன் யானை நின்றதால் வாகன ஓட்டிகளை தாக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக அதிகாரிகள் காத்திருந்தனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் யானைகள் வனப் பகுதிக்குள் சென்ற பிறகு வாக்குப் பெட்டிகளை ஏற்றி வந்த லாரி புறப்பட்டு கோபிசெட்டிபாளையம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தடைந்தது. யானைகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாக்கு எண்ணும் மையத்திலும் தாமதம் ஏற்பட்டு மாலையில் பணி நிறைவடைந்ததாக தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com