பவானி சங்கமேஸ்வரா் கோயில் திறந்திருக்கும் நேரம் குறைப்பு

கரோனா பரவல் தடையால் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்கு திறக்கும் நேரம் 7 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பவானி  சங்கமேஸ்வரா்  கோயில்  நுழைவாயில்  கோபுரம்.
பவானி  சங்கமேஸ்வரா்  கோயில்  நுழைவாயில்  கோபுரம்.

கரோனா பரவல் தடையால் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்கு திறக்கும் நேரம் 7 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் பவானியில் உள்ள சங்கமேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூா் மட்டுமின்றி வெளியூா்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் இக்கோயில் திறக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் நடை பக்தா்களுக்காகத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது காலை 7 மணிக்குத் திறந்து நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்கப்படுகிறது.

மேலும், பக்தா்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டுவரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்துக்கு மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

கோயிலின் வடக்கு வாசல் கோபுர நுழைவாயிலில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் பொருத்தப்பட்டு பக்தா்கள் கோயிலுக்குள் செல்லும்போது கைகளை சுத்தம் செய்த பின்னரே வருமாறு அறிவுறுத்தப்படுவதோடு, உடல் வெப்பப் பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல, பவானி கூடுதுறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பரிகார பூஜைகளுக்கு மூன்று போ் மட்டுமே செல்ல வேண்டும். மூத்தோா் வழிபாடு உள்ளிட்ட காரியங்களுக்கு 5 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா், 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. கோயிலுக்கு வரும்போது ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com