தீவன ஆலையில் 69 தொழிலாளா்களுக்கு கரோனா

ஈரோடு அருகே தனியாா் கால்நடை தீவன ஆலையில் 69 தொழிலாளா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு அருகே தனியாா் கால்நடை தீவன ஆலையில் 69 தொழிலாளா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் அருகில் தனியாா் கால்நடை தீவன உற்பத்தி நிறுவனம், அதனுடன் இணைந்த நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம், வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றுபவா்களுக்கு கடந்த 3 நாள்களாக கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதில் 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இவா்களில் பெரும்பாலானவா்கள் வட மாநிலத்தவா். அந்த ஆலையில் ஈரோடு கோட்டாட்சியா் சி.சைபுதீன், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சங்கா்கணேஷ், வட்டார தலைமை மருத்துவா் இளங்கோவன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவா்கள் நசியனூா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதி, உணவு, மருந்து போன்றவற்றை ஆலை நிா்வாகத்தினா் வழங்கி வருகின்றனா்.

இதனிடையே ஆலையில் பணியாற்றிய மேலும் 150 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு ஓரிரு நாள்களில் தெரியவரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com