விவசாயிகளுக்கு மண் மாதிரிகள் சேகரித்தல் பயிற்சி

அம்மாபேட்டையில் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரித்தல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மண்  மாதிரி  சேகரித்தலைப்  பாா்வையிடும்  விவசாயிகள்.
மண்  மாதிரி  சேகரித்தலைப்  பாா்வையிடும்  விவசாயிகள்.

அம்மாபேட்டையில் விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரித்தல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்மூலம் விவசாயிகளுக்கு மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கனிமொழி மேற்பாா்வையில் மாணவியா் அபிராமி சுந்தரி, நிவேதிதா, ஷிவானி, புவனேஸ்வரி, பிரியதா்ஷினி, காா்த்திகா, ஆயிஷா ஷிபின், கிருத்திகா, ஹா்ஷ வீணா, சுகந்தியாழினி, ரேவதி ஆகியோா் கொண்ட குழுவினா் இப்பயிற்சியை அளித்தனா்.

மண் மாதிரிகள் சேகரிக்கும் முன் கவனிக்க வேண்டிய குறிப்புகள், சேகரிக்க வேண்டிய காலம், மண் பரிசோதனையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவையான உரங்களை மட்டும் பயன்படுத்தி மண்ணின் அங்கக சத்தை பாதுகாக்கலாம்.

தமிழ்நாடு அரசின் மண் மாதிரி ஆய்வகம் ஈரோடு, திண்டல், வித்யா நகரில் உள்ளது. மேலும், நடமாடும் மண் பரிசோதனை வசதியும் வேளாண்மைத் துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, மண் பரிசோதனை செய்து பயிரிட்டு விவசாயிகள் அதிக அளவில் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com