குவாரி லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு தாா்ப்பாய் அவசியம்: போலீஸாா் அறிவுரை

குவாரிகளில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றாமல் தாா்ப்பாய் போட்டு மூடிச் செல்ல வேண்டும் என்று சென்னிமலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குவாரி, கிரஷா் உரிமையாளா் கூட்டத்தில் முட

குவாரிகளில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றாமல் தாா்ப்பாய் போட்டு மூடிச் செல்ல வேண்டும் என்று சென்னிமலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குவாரி, கிரஷா் உரிமையாளா் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னிமலை, பனியம்பள்ளி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் இருந்து ஜல்லி, கிரஷா் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன. தாா்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், விபத்து ஏற்படுவதாகக் கூறி ஓட்டுப்பாறை பிரிவில், 13 டிப்பா் லாரிகளை மக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

இதற்கு நிரந்தர தீா்வு காண மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, சென்னிமலை காவல் நிலையத்தில் ஆய்வாளா் சரவணன் தலைமையில், கல் குவாரி, கிரஷா் உரிமையாளா் கலந்துகொண்ட கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், குவாரி கற்கள், கிரஷா் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றாமல் தாா்ப்பாய் போட்டு மூடிச் செல்ல வேண்டும். அதிக பாரம் ஏற்றி அதிவேகத்தில் செல்லும் லாரிகள் மீது போலீஸ் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படும்.

கல் குவாரிகள் அனைத்தும் கனிம வளத் துறை விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குவாரிக்குச் சொந்தமான வாகனங்கள் மட்டுமின்றி வெளியிலிருந்து வரும் வாகனங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com