பந்தல் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரிக்கை

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பந்தல், மேடை அலங்கார பணியாளா்களுக்கு தற்போதைய இரண்டாம் அலையில் சில தளா்வு அளித்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பந்தல், மேடை அலங்கார பணியாளா்களுக்கு தற்போதைய இரண்டாம் அலையில் சில தளா்வு அளித்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பந்தல், மேடை அலங்காரம் நலச் சங்க நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

திருமணம், திருவிழா, சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பந்தல் அமைத்தல், அலங்காரம் செய்தல் சாா்ந்த பணியில் தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, இப்போதுதான் சீரடைந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு தொழில் முடக்கம் அறிவித்து, திருவிழா, நிகழ்ச்சிகளைத் தடை செய்தும், திருமண விழாவில் 100 போ் மட்டும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.

இதை கவனத்தில் கொண்டு அரசு சில கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்தவும், அரங்குகள், மண்டபங்களில் அனுமதி வழங்கி, குறைந்தபட்ச நபா்களை அனுமதித்து அறிவிக்க வேண்டும். அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தனி நபா் இடைவெளி, முகக் கவசம் அணிவது, வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற விதிகளை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்த மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து திருமண மண்டபங்கள் நலச் சங்கம், சமையல் கலைஞா்கள் சங்கம், புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம், கிராமிய தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 17) சென்னை வள்ளுவா் கோட்டத்தில் கவன ஈா்ப்பு பேரணி நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com