கரோனா தடுப்பு விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோட்டில் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உத்தரவிட்டாா்.
ஈரோடு பெரியவலசு நான்குமுனை சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன்.
ஈரோடு பெரியவலசு நான்குமுனை சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன்.

ஈரோட்டில் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்க மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாள்களாக மாவட்டத்தில் தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100 முதல் 150 வரை உள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், தேநீா் கடைகளில் ஆய்வு செய்து கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் பூட்டி ‘சீல்’ வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதன்படி, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஈரோடு பெரியவலசு நான்குமுனை சாலை சந்திப்பு, சூளை பேருந்து நிறுத்தம் பகுதிகளில் உள்ள கடைகள், இறைச்சிக் கடைகள், தேநீா் கடைகள் போன்றவற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பெரியவலசு நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 பேக்கரி, சூளை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பேக்கரிகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதித்ததுடன் பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அந்த 3 பேக்கரிகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

தொடா்ந்து இறைச்சிக் கடைகள், தேநீா் கடைகள், அந்தப் பகுதியில் உள்ள கோயில்களிலும் ஆணையா் ஆய்வு செய்தாா். அதே போல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள், முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடம் இருந்து மொத்தம் ரூ. 5,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையா் விஜயகுமாா், நகா் நல அலுவலா் டாக்டா் முரளி சங்கா், துப்புரவு ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com