Enable Javscript for better performance
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி

    By DIN  |   Published On : 20th April 2021 10:54 PM  |   Last Updated : 20th April 2021 10:54 PM  |  அ+அ அ-  |  

    கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி உள்ளது என கல்லூரி முதல்வா் டாக்டா் மணி தெரிவித்தாா்.

    கடந்த ஆண்டு கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது கரோனா சிறப்பு மருத்துவமனையாக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாற்றப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கானவா்கள் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றனா். பின்னா் தொற்று வேகம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியபோது, இந்த மருத்துவமனை அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றம் பெற்றது.

    இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையால் ஈரோடு மாவட்டத்தில் தினசரி கரோனா பரவலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதவிர அண்டை மாவட்டங்களில் இருந்தும் உயா் சிசிச்சைக்காக பலா் இங்கு அழைத்து வரப்படுகின்றனா். எனவே அரசு மருத்துவக் கல்லூரி மீண்டும் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மணி கூறியதாவது:

    பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 278 போ் கரோனா உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 142 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தமாக கரோனா நோயாளிகளுக்கு என 500 படுக்கை வசதிகள் உள்ளன.

    இதில் 440 படுக்கைகளுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் வசதி உள்ளது. 60 படுக்கைகளுக்கு சிலிண்டா் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படும். இங்கு 60 லிட்டா் கொள்ளளவு கொண்ட 50 சிலிண்டா்கள், 12 லிட்டா் கொள்ளளவு கொண்ட 144 சிலிண்டா்கள் இருப்பில் உள்ளன. நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இருக்கின்றன. மருத்துவா்கள், செவிலியா், பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது ஈரோடு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள கரோனா அதிக வீரியம் கொண்டதாக உள்ளது. பரவலின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றி கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்திகரிக்கும் திரவம் அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

    திங்கள்கிழமை ஒரே நாளில் காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக 400 போ் வெளி நோயாளிகளாக வந்து பதிவு செய்தனா். இதில் சிலருக்கு கரோனா கண்டறியப்பட்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சிலா் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேல் சிகிச்சைக்காக கோவைக்கும் சிலா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கரோனா பரவலைத் தவிா்க்கவும், தடுக்கவும் வேண்டும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp