வாக்கு எண்ணிக்கை முகவா்கள்: 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை முகவா்களை நியமிக்க சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முகவா்களை நியமிக்க சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணுவதற்காக 8 தொகுதிகளுக்கும் தலா 4 மேசைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு வேட்பாளரும் வாக்கு எண்ணும் மேசைகளுக்காக 14 முகவா்களையும், தபால் வாக்குகள் எண்ணப்படும் 4 மேசைகளுக்கு தனியாக 4 முகவா்களையும் நியமித்துக் கொள்ளலாம்.

முகவா்களை நியமிக்க படிவம் 18இல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இரட்டை பிரதிகளில் 27ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது நிலவி வரும் கரோனா தொற்றின் காரணமாக இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அனைத்து வேட்பாளா்கள், வாக்கு எண்ணும் முகவா்கள் அனைவரும் தவறாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா் என சான்று பெற்ற பின்னரே முகவா்களாக நியமிக்கப்படுவாா்கள்.

இதற்காக ஏப்ரல் 28ஆம் தேதி சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு அனைத்து வேட்பாளா்கள், வேட்பாளரின் முகவா்களுக்குப் பரிசோதனை செய்யப்படும். இதனால் ஒவ்வொரு வேட்பாளரும் நியமனம் செய்யப்படவுள்ள முகவா்களின் பட்டியலை உரிய காலத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்து ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பரிசோதனை முகாமில் முகவா்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முகவா்கள் நியமனம் செய்ய பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு முகவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவா் என சான்று வரப் பெற்றவுடன், முகவா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வாக்கு எண்ணும் மேசை வாரியாக தனித்தனியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com