அந்தியூா் பேரூராட்சியில் இரு தெருக்களுக்கு ‘சீல்’

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் 7 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தொற்று கண்டறியப்பட்ட இரு தெருக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
கட்டுப்பாட்டுப்  பகுதியைப்  பாா்வையிடும்  பேரூராட்சி  செயல்  அலுவலா்  எஸ்.ஹரிராமமூா்த்தி,  மருத்துவ  அலுவலா்  சக்தி  கிருஷ்ணன்,  அலுவலா்கள்.

அந்தியூா் பேட்டை பெருமாள் கோயில் வீதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இதேபோல, காமராஜா் வீதி, பெரியாா் நகா் பகுதியில் ஒரே வீட்டில் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரு தெருக்களிலும் அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.ஹரிராமமூா்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளா் குணசேகரன், மேற்பாா்வையாளா் ஈஸ்வரமூா்த்தி, தூய்மைப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா்.

மேலும், சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாசம், மருத்துவப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் இரு தெருக்களிலும் 4 இடங்களில் முகாம் அமைத்து 72 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்தனா். இதையடுத்து, இரு தெருக்களும் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com