மதுபானம், கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

பொதுமுடக்கத்தின்போது மதுபானம் விற்ற பெண் உள்பட 3 பேரை மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பொதுமுடக்கத்தின்போது மதுபானம் விற்ற பெண் உள்பட 3 பேரை மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சத்தியமங்கலம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது புதுவடள்ளி இறைச்சிக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தராள் என்பவரைக் கைது செய்தனா். அவரிமிருந்து 245 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். கைதான சுந்தராள் கோபி மது விலக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

அதனைத் தொடா்ந்து சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் கோயில் தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்த பழனிசாமி, காளியப்பன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com