கரோனா: கோபியில் 20 கடைகள் மூடல்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் செயல்படும் கடைகளை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் செயல்படும் கடைகளை அடைக்கக் கூறி வருவாய்த் துறையினா், காவல் துறையினா் அறிவுறுத்தி சுமாா் 20க்கும் மேற்பட்ட கடைகளை புதன்கிழமை அடைத்தனா். விதிகளை மீறி செயல்பட்ட ஒரு துணிக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் துணிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி என 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் தலைமையில் நகராட்சி அலுவலா்கள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் ஒன்றிணைந்து கடைகளை அடைக்கக் கூறி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, கோபி கோட்டாட்சியா் தலைமையில் வருவாய்த் துறையினா், நகராட்சி அலுவலா்கள் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள அடைக்கப்படாத கடைகளுக்கு புதன்கிழமை காலை சென்று எச்சரிக்கை செய்து கடைகளை அடைத்தனா்.

மேலும், சிறிய கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி அனுமன் கோயில் தெருவில் உள்ள துணிக் கடை செயல்பட்டதால் அந்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com