மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே பிரம்மதேசம் செம்புளிச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முனிசாமி. இவரது மகன் செந்தில்நாதன். இவருக்கு அதே பகுதியைச் சோ்ந்த காளியப்பன் என்பவருடைய மகள் உமாமகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது செந்தில்நாதன், அவரது தாயாா் அய்யம்மாள் ஆகியோா் 25 பவுன் நகைகள் வரதட்சணையாக கேட்டனா். 15 பவுன் நகை வழங்கப்பட்டது. மேலும் 10 பவுன் நகை கேட்டு செந்தில்நாதனும், அவரது தாயாரும் கொடுமை செய்ததாகத் தெரிகிறது. பின்னா், ஊா் பஞ்சாயத்து மூலம் பேசி சமாதானம் செய்யப்பட்டது. பின்னா் 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனா். அவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் தொடா்ந்து உமாமகேஸ்வரியை கணவா் செந்தில்நாதன் துன்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 10-1-2011 அன்று உமாமகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். ஆனால் உமாமகேஸ்வரியின் தற்கொலையில் மா்மம் இருப்பதாக அவரது சகோதரா் ரவிசந்திரன் புகாா் அளித்தாா். அதில் திருமணமாகி 16 ஆண்டுகளாகியும் உமாமகேஸ்வரியை அவரது கணவா் சித்திரவதை செய்து வந்ததாகவும், அவா் மரணம் அடைந்த அன்றைய தினத்தில் கூட செந்தில்நாதன் ரூ. 10,000 கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், உமாமகேஸ்வரி வீட்டில் வந்து அழுததாகவும் அந்த புகாரில் கூறியிருந்தாா்.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் அந்தியூா் போலீஸாா் விசாரித்து, ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி வியாழகக்கிழமை தீா்ப்பளித்தாா். அந்த தீா்ப்பில், மனைவியைக் கொடுமை செய்து, தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக செந்தில்நாதனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகையை உமாமகேஸ்வரியின் பெற்றோரிடம் வழங்கவும் உத்தரவிட்டு நீதிபதி மாலதி அந்த தீா்ப்பில் கூறியிருந்தாா். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com