வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளா்கள், வேட்பாளா்கள்,
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை செய்து கொண்ட ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை செய்து கொண்ட ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், பத்திரிகையாளா்கள், பிற பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை வியாழக்கிழமை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 128 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், நான்கு மேஜைகளில் வாக்குகளும் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவா் வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்தல் ஆணையம் சாா்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா், 17 உதவியாளா், 17 நுண் பாா்வையாளா்கள் என 408 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா். தவிர தோ்தல் பணியாற்றும் அதிகாரிகள், தூய்மைப் பணியாளா்கள், போலீஸாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிக்கு ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், பத்திரிகையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் பரிசோதனை செய்யப்பட்டது.

இரண்டு தடுப்பூசி செலுத்தியுள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் அதற்கான சான்று நகலை தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா், தங்களுக்கான பணி தலைமை அதிகாரிகளிடம் வழங்கினா்.

வியாழக்கிழமை எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவை வரும் 1ஆம் தேதிக்குள் உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்று உள்ளவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com