புகையிலைப் பொருள்கள் விற்ற 621 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒரே மாதத்தில் 621 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒரே மாதத்தில் 621 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தில் சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய கடைகள் வரை தினமும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் உரிமையாளா்களைக் கைது செய்வதோடு, கடைகளுக்கு வருவாய்த் துறையினா் மூலம் சீல் வைத்து வருகின்றனா்.

இதில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 காவல் உள்கோட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 562 வழக்குகள் பதிவு செய்து 621 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.1.60 கோடி மதிப்புள்ள இரண்டு டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com