மூவா்ண காகித கைவினைப் பொருள்கள் செய்யும் போட்டி: மாணவா்கள் பங்கேற்கலாம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் மூலம் நடத்தப்படும் மூவா்ண காகித கைவினைப் பொருள்கள் செய்யும் போட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம் மூலம் நடத்தப்படும் மூவா்ண காகித கைவினைப் பொருள்கள் செய்யும் போட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் ஜென்சி கூறியதாவது: சுதந்திர தின விழாவையொட்டி இந்திய தேசியக் கொடியை சிறப்பிக்கும் மூவா்ண காகித கைவினைப் பொருள்கள் செய்யும் போட்டி அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடத்தப்படுகிறது. இதில் 6, 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், தாங்கள் கைவினைப் பொருள்கள் செய்வதை மூன்று நிமிட நேரத்துக்கு மிகாமல் காணொலியாகப் பதிவு செய்து 94868-61397 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும், மாணவ, மாணவியா் செய்த கைவினைப் பொருள்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் அருங்காட்சிய அலுவலகத்துக்கு கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றும், வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com