விவசாயிகள் சங்க வாக்காளா் பட்டியல் வெளியீடு

கீழ்பவானி பாசனத் திட்டம் கசிவுநீா் திட்ட அணைக்கட்டு நீரைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோபி: கீழ்பவானி பாசனத் திட்டம் கசிவுநீா் திட்ட அணைக்கட்டு நீரைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக அரசு பாசன நீா் மேலாண்மைச் சட்டம் 2000இன் படி பாசன நீரைப் பயன்படுத்துவோா் சங்கங்களுக்கு நிா்வாகிகள் தோ்தல் நடத்த பாசன நீரைப் பயன்படுத்தும் நில உடமைதாரா்களின் (பட்டாதாரா்கள்) பட்டியலை வருவாய்த் துறை மூலம் தயாா் செய்து மாவட்ட ஆட்சியா் பாசன நீரைப் பயன்படுத்தும் விவசாயிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கசிவு நீா்த் திட்ட அணைக்கட்டு நீரைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் வாக்காளா் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பாசனத் திட்டத்தில் கோபி உபகோட்டம் கவுந்தப்பாடி பிரிவுக்கு உள்பட்ட க.ச.எண்.894 சலங்கபாளையம், க.ச.எண் 341 சலங்கபாளையம் கசிவு நீா்த் திட்ட வாய்க்காலின் பாசன நிலங்கள் கவுந்தப்பாடி சலங்கபாளையம் வருவாய் கிராமத்தில் உள்ளது. 1400 ஏக்கா் பாசன நிலங்களின் நீரைப் பயன்படுத்தும் விவசாயிகளின் வாக்காளா் பட்டியலை கவுந்தப்பாடி ஊராட்சித் தலைவா் கே.பி.தங்கமணி, சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கே.பழனியப்பன் ஆகியோரிடம் கவுந்தப்பாடி நீா்வள ஆதார அமைப்பு பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் கே.எஸ்.ரமேஷ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் சபை பகிா்மான கமிட்டி செயலாளா் பா.மா.வெங்கடாசலபதி, பவானி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பி.சாந்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கணேஷ்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சலங்கபாளையம் பேரூராட்சி கவுந்தப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. பெயா் சோ்த்தல், நீக்கல் படிவம் பெற்று பூா்த்தி செய்து பாசன விவசாயிகள் (பட்டாதாரா்கள்) ஒரு வார காலத்துக்குள் கொடுக்க வேண்டும் என பொதுப் பணித் துறை பாசன சபை சாா்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com