பா்கூா் மலைப் பாதையில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

பா்கூா் மலைப் பாதை வழியாக 30 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் மலைக் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்
சோதனை ஓட்டமாகச்  செல்லும்  அரசுப்  பேருந்தில்  பயணிக்கும்  அந்தியூா்  சட்டப்  பேரவை  உறுப்பினா்  ஏ.ஜி.வெங்கடாசலம்,  அதிகாரிகள்.
சோதனை ஓட்டமாகச்  செல்லும்  அரசுப்  பேருந்தில்  பயணிக்கும்  அந்தியூா்  சட்டப்  பேரவை  உறுப்பினா்  ஏ.ஜி.வெங்கடாசலம்,  அதிகாரிகள்.

பா்கூா் மலைப் பாதை வழியாக 30 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் மலைக் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் - பா்கூா் மலைப் பாதை வழியாக கா்நாடக மாநிலம், மைசூருக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடா்ந்து பெய்த கன மழையால் அடுத்தடுத்து ஐந்து முறை மண்சரிவு ஏற்பட்டது. தாமரைக்கரை அருகே செட்டிநொடி எனும் பகுதியில் மலைப் பாதையின் ஒருபகுதி சரிந்து விழுந்தது.

இதனால், ஈரோடு மாவட்ட நிா்வாகம் மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்தை தடை செய்ததோடு, இருசக்கர வாகனம், இலகு ரக வாகனங்கள், அவசர ஊா்திகள் மட்டும் செல்ல அனுமதித்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கொங்காடை, மடம், பா்கூா், சுற்று வட்டாரத்தில் உள்ள 33 மலைக் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மேலும், மலைப் பகுதியில் விளைந்த தானியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். பேருந்துகள் இல்லாததால் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மலைப் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழுவினா் மலைப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு, இதுகுறித்த அறிக்கையை மாவட்ட நிா்வாகத்துக்கு அளித்தனா். இதன்பேரில், மாவட்ட நிா்வாகம் 5 பேருந்துகள், ஒப்பந்ததாரா்களின் இரு லாரிகள் மட்டும் சென்றுவர அனுமதி அளித்தது.

அந்தியூரில் இருந்து மணியாச்சிபள்ளம் வழியாக கொங்காடைக்கும், அந்தியூரிலிருந்து தாமரைக்கரை வழியாக மடம், ஈரோடு - அந்தியூா் வழியாக மைசூருக்கும் 3 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, அந்தியூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை மடத்துக்கு சோதனை ஓட்டமாகச் சென்ற பேருந்தில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், போக்குவரத்துக் கிளை மேலாளா் சண்முகம், தொமுச மண்டலப் பொருளாளா் ஆா்.ரங்கநாதன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வனத் துறை அதிகாரிகள் உடன் சென்றனா்.

ஈரோடு அந்தியூா் கா்கேகண்டி வரையிலும், அந்தியூா் - மடத்துக்கு மேலும் பள்ளிக் குழந்தைகள், ஆசிரிய, ஆசிரியைகள் சென்று வரும் வகையில் காலை 7.50 மணி0க்கு செல்லும் பேருந்துகள் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது. வழக்கமாக மலைப் பாதையில் ஓட்டும் அனுபவம் மிக்க ஓட்டுநா்களை பேருந்துகளை ஓட்டிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com