முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் நாளை பாரதி விழா: லட்சுமிகாந்தன் பாரதிக்கு விருது
By DIN | Published On : 10th December 2021 01:56 AM | Last Updated : 10th December 2021 01:56 AM | அ+அ அ- |

ஈரோடு பாரதி விழாவில் தியாகி கி.லட்சுமிகாந்தன் பாரதிக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருது ஈரோட்டில் சனிக்கிழமை (டிசம்பா் 11) வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:
மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளான டிசம்பா் 11ஆம் தேதி ‘பாரதி விழா’ ஈரோடு நகரில் கடந்த 23 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. டிசம்பா் 11ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஈரோட்டில் பாரதி விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விடுதலைப் போராட்ட வீரரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதிக்கு ‘பாரதி விருது’ வழங்கப்படவுள்ளது. இவருக்கு தற்போது 96 வயது.
இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டையும், பாரதியின் நினைவு நூற்றாண்டையும் முன்னிட்டு இந்த ஆண்டு விடுதலைப் போராட்ட வீரரான கி.லட்சுமிகாந்தன் பாரதிக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது கேடயமும், ரூ. 25,000 பொற்கிழியும் உள்ளடக்கியதாகும்.
கோவை பாரதிய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பாரதி விருது வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.
இந்நிகழ்ச்சியில், பதிப்புலக முன்னோடி சக்தி வை.கோவிந்தனின் திருவுருவப் படத்தை கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளா் மு.வேலாயுதம் திறந்துவைக்கவுள்ளாா்.விருதாளா் கி.லட்சுமிகாந்தன் பாரதி ஏற்புரை நிகழ்த்தவுள்ளாா். கரோனா தொற்று பரவலைக் கணக்கிலெடுத்து இந்நிகழ்வு ம்ஹந்ந்ஹப்ள்ண்ய்ற்ட்ஹய்ஹண்ல்ங்ழ்ஹஸ்ஹண்ங்ழ்ா்க்ங் என்ற யூடியூப் மற்றும் முகநூல் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.