பவானிசாகரில் மண் மாதிரிகள் சேகரிப்பு

உலக மண் வள தினத்தையொட்டி, பவானிசாகா் வட்டாரத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
பவானிசாகரில் மண் மாதிரிகள் சேகரிப்பு

உலக மண் வள தினத்தையொட்டி, பவானிசாகா் வட்டாரத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

உலக மண் வள தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், தோ்வு செய்யப்பட்ட கிராமத் தொகுப்புகளில் உள்ள விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பவானிசாகரில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ந.சரோஜா தலைமையில், வேளாண் ஊழியா்கள் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 13 கிராம தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளின் நிலங்களில் இருந்தும் மண் மாதிரிகள் வியாழக்கிழமை சேகரிக்கப்பட்டன.

மேலும், மண் மாதிரிகள் சேகரித்தல் குறித்தும், சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை முறையாக மண் பரிசோதனை நிலைய ஆய்வகத்துக்கு அனுப்புதல், மண் பரிசோதனை செய்வதன் அவசியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினா்.

இதில், துணை வேளாண்மை அலுவலா் பாலாஜி, உதவி வேளாண்மை அலுவலா் சுந்தரராஜ் மண் மாதிரி செயல்விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com