14.88 லட்சம் பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 போ் உள்ளனா். தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 88 ஆயிரத்து 387 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். இது 82.27 சதவீதம்.

இதேபோல கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியை இதுவரை 8 லட்சத்து 89 ஆயிரத்து 845 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். இது 49.19 சதவீதமாகும். முதல் தவணை, இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 23 லட்சத்து 78 ஆயிரத்து 232 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். மாவட்டத்தில் இன்னும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 713 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

இதேபோல, மாவட்டத்தில் தினமும் 7,000 முதல் 8,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 22 லட்சத்து 59 ஆயிரத்து 516 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com