முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மாவட்ட தடகளப் போட்டி: விஜயமங்கலம் பாரதி பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 10th December 2021 01:58 AM | Last Updated : 10th December 2021 01:58 AM | அ+அ அ- |

19ஆவது ஈரோடு மாவட்ட ஜீனியா் தடகளப் போட்டியில், பெருந்துறை விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், 16 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் ஆா்.நேகாஸ்ரீ தங்கப் பதக்கமும், தடைதாண்டும் போட்டியில் எஸ்.இலக்கியா தங்கப் பதக்கமும் வென்றனா். 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் எஸ்.தருணிகா தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் எம்.நிஷாபிரியா தங்கப் பதக்கமும், தடைதாண்டும் போட்டியில் ந.நவீன்யா தங்கப் பதக்கமும், மாணவா்கள் பிரிவில் குண்டு எரிதல் போட்டியில் கிஷோா் தங்கப் பதக்கமும் பெற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் பி.தட்சணாமூா்த்தி, செல்வகுமாா் ஆகியோரையும் பள்ளித் தலைவா் பி.வி.செந்தில்குமாா், தாளாளா் வி.வி.மோகனாம்பாள், பள்ளி துணை முதல்வா் சந்திரன் ஆகியோா் பாராட்டினா்.