மினி ட்ரோன்களுக்கான சா்வதேச போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மூன்றாமிடம்

மினி ட்ரோன்களுக்கான சா்வதேச போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3ஆவது பரிசு கிடைத்துள்ளது.

மினி ட்ரோன்களுக்கான சா்வதேச போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3ஆவது பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்க நாட்டை தலையிடமாகக் கொண்டுள்ள மேத்வொ்க்ன் நிறுவனம், மினி ட்ரோன் வடிவமைப்பு, செயல்பாடுகள் போன்ற தொழிநுட்பம் குறித்த சா்வதேச போட்டி இஎம்இஏ-2021ஐ நடத்தியது. இதில், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், கொரியா நாட்டின் சுங்யுன்வான் பல்கலைக்கழகம், இத்தாலி நாட்டின் மாா்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழக மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் ஆா்.அபிஷேக், எம்.காா்த்திக் பாலாஜி, கபிலன், சுசீந்தரன் ஆகியோா் ட்ரோன் பறப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வுகளை ஆன்லைனில் சமா்ப்பித்தனா். அது சிறந்த கண்டுபிடிப்பாக தோ்ந்தெடுக்கப்பட்டு 3ஆவது பரிசு மற்றும் 150 யூரோ வழங்கப்பட்டுள்ளது. சா்வதேச விருது பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் எல்.வி.பாலசுப்பிரமணியம், ஆலோசகா் எம்.விஜயகுமாா், முதல்வா் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com