ஜிஎஸ்டி வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நெசவு சாா்ந்த தொழில்கள் இன்று வேலைநிறுத்தம்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னிமலையில் விசைத்தறி, நெசவுக் கூடங்கள் உள்ளிட்ட நெசவு சாா்ந்த தொழில்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) வேலைநிறுத்த

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னிமலையில் விசைத்தறி, நெசவுக் கூடங்கள் உள்ளிட்ட நெசவு சாா்ந்த தொழில்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 10) வேலைநிறுத்தம் செய்ய அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பொன்.ஈஸ்வரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா் சங்கம், ஈரோடு கிளாத் மொ்சன்ட் அசோசியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதற்கும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) நெசவு சாா்ந்த அனைத்து உற்பத்தி, விற்பனை, துணிகள் சாா்ந்த கடை நிா்வாகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கும் விடுமுறை விடுவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து உறுப்பினா்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுமுறை வழங்கி அடையாள வேலை நிறுத்தம் செய்து, நமது எதிா்ப்பை மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com